செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு, விச வாயு காற்றில் கலந்ததில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு செர்பியாவில் அம்மோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து தடம் புரண்டதில், அதில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அமோனியா வெளியே சிதறி காற்றில் கலந்தது.
இதையடுத்து காற்றில் கலந்த அமோனியா விஷ வாயுவை சுவாசித்த 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேலும் 7 பேர் நிஸிலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமோனியாவை ஏற்றிக் கொண்டு வந்த தொடருந்து தடம் புரண்டது, மற்றும் வளிமண்டலத்தில் அதிக அளவு விச வாயு பரவி உள்ளது என்று தெரிவித்துள்ளது.
அவசரகால நிலை அறிவிப்பு அத்துடன் 60,000 பேர் வசிக்கும் நகரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டது, மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
20 பெட்டிகள் கொண்ட இந்த தொடருந்து அண்டை நாடான பல்கேரியாவில் இருந்து நச்சுப் பொருட்களை கொண்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.