பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!

பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643 ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது.இது மே 13ம் திகதி முதல் ஜூன் 1ம் திகதி வரையிலான நிலவரம் ஆகும். மேலும், பிரித்தானியாவில் 190 பேரும் ஸ்பெயினில் 142 பேரும், போர்த்துக்கலில் 119 பேரும் ஜேர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.