3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல்..! உக்ரைனை திணறடித்த ரஸ்யா


உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது,

அதிலும் கிரிமியாவில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு உக்ரைன் மீதான ரஸ்யாவின் வான்வழி தாக்குதல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் ரஸ்யா 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆனால் அவற்றில் 44 ஏவுகணைகளை உக்ரைன் விமான படை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் தெரிவித்துள்ள தகவலில், திங்கட்கிழமை காலை 7 மணி முதல் ரஸ்யாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகளால் உக்ரைன் நகரம் தாக்கப்பட்டது.

இதன் விளைவாக பல பிராந்தியங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ரஸ்ய ஏவுகணைகளின் முக்கிய குறியாக உக்ரைனின் சக்தி நிலையங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது