சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருது-படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று 5 தேசிய விருதுகள் சூரரைப் போற்று திரைப்படத்திற்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் வகையில் பாடி கிரீன் சினிமாஸ் திரையரங்கில் சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களுக்குச் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் சதீஷ் உள்ளிட்ட படக் குழுவினர் கேக் வெட்டி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.சூரரைப் போற்று படத்திற்கு 5 விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்தனர்.