ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், ரயிலும் பஸ்ஸ{ம் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நோவ் ஜாம்கி என்ற நகரத்திற்கு அருகில் நேற்று மாலை 5 மணிக்கு சற்று பிறகு ரயிலும் பஸ்ஸ{ம் மோதி கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சிலர் காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் நகரங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்