இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.இதன்படி டெல்லிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வட இந்தியாவில் இன்று புழுதிப்புயல் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.