கொதிநிலையில் ரஷ்யாவின் படையெடுப்பு..! 16295 பொதுமக்கள் - 423 குழந்தைகள் உயிரிழப்பு

ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக குறைந்தது 437 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

837 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது எனினும் இது இறுதியானது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் அவர்கள் இன்னும் தீவிரமான சண்டை மண்டலங்கள், விடுவிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ரஷ்யப் படைகளால் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தகவல்களைச் சரிபார்த்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு டொனெட்ஸ்க் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 423 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து குறைந்தது 16,295 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இது ஒரு தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புச் செயல் என்று கெய்வ் மற்றும் மேற்கத்திய தலைவர்கள் கண்டித்துள்ளனர்.