இந்தியாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் : மீட்பு பணி தீவிரம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்காக சுரங்கம் தோண்டப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்பதற்குரிய பணிகள் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தன.

சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்கள் தொடர்பில் இருப்பதாக மீட்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் 35 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் இருப்பதாகவும் மீட்புப்பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.