38 வருட பாச போராட்டம் - இலங்கையில் தாயை கண்டுபிடித்த நெதர்லாந்து பெண்!


இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நெதர்லாந்து பெண் ஒருவர் 38 வருடங்களின் பின்னர் தனது தாயை கண்டுபிடித்துள்ளார்.

இலங்கையில் தாயொருவருக்கு பிறந்த பெண் குழந்தையை 38 ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் நெதர்லாந்து தம்பதியருக்கு தத்துக்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனது பிறப்பு தொடர்பில் அறிந்த பெண் தனது தாயை தேடும் முயற்சியில் பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.

அதேவேளை, தாயின் விபரங்களை திரட்ட நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, தனது தாயின் புகைப்படம், தனது பிறந்த திகதி போன்ற சில விபரங்களை வைத்து பிறந்த வைத்தியசாலையை கண்டுப்பிடித்து தனது தாயை கண்டுப்பிடித்துள்ளார்.