நியூயார்க் நகரில் மிட் டவுன் மன்ஹாட்டன் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பொலிஸ் அதிகாரி உட்பட நால்வரைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்காணிப்பு கமெரா பதிவுகளில் இருந்து துப்பாக்கிதாரி ஷேன் தமுரா என்வர் என அடையாளம் கண்டுள்ள நிலையில், அந்த நபரும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்
துப்பாக்கிச் சூட்டில் NYPD அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. பார்க் அவென்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் அபாயகரமான துப்பாக்கியுடன் ஒருவர் நடந்து செல்வது கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, நியூயார்க் நகர பாதுகாப்புப்படை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மரணமடைந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது ஷேன் டெவோன் தமுரா என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
33வது மாடிக்குச் செல்வதற்கு முன்பு, துப்பாக்கிதாரி உள்ளூர் நேரப்படி மாலை 6.40 மணியளவில் கட்டிடத்தின் லாபியில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.