துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து-25 பேர் பலி!

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டசன் கணக்கானவர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.ஆனால் 110 பேர் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் பதினேழு பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா டுவிட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.முன்னதாக உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு வெடிப்பின் போது 49 பேர் 300 மீட்டர் மற்றும் 350 மீட்டர் (985 முதல் 1,148 அடி) நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். இது ஆபத்தான மண்டலம் என்று விபரித்தார்.

சுரங்கத்தினுள் தீ விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை, உள்ளே காற்றோட்டம் சரியாக வேலை செய்கிறது, சுரங்கத்திற்குள் பகுதி சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.இந்த வெடிப்பு சுரங்கத்தின் நுழைவாயிலுக்கு கீழே 300 மீட்டர் (985 அடி) அளவில் நிகழ்ந்ததாக பார்டின் ஆளுனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் அரசுக்கு சொந்தமான துருக்கிய ஹார்ட் நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமானது.

நிலக்கரிச் சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர்டேம்பினால் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று (சனிக்கிழமை) அந்த இடத்தை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துருக்கி கடந்த 2014ஆம் ஆண்டு அதன் மிக மோசமான நிலக்கரி சுரங்க பேரழிவைக் கண்டது, அப்போது 30பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.