2023 ஜல்லிக்கட்டால் உயிரிழந்த மாடு பிடி வீரன்..! கதறி அழும் தாய்


இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று கோலாகலமாக நடந்தது.

இந்த போட்டியில் பாலமேடு பகுதியைச் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார்.

கடந்த ஐந்து வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளுடன் களமாடிய அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு காளைகளை அடக்கி சிறந்த வீரராக திகழ்ந்தார்.

இந்த நிலையில், நேற்று வாடிவாசலில் இருந்து திடீரென ஆக்ரோஷத்துடன் வெளிவந்த காளை அவரின் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது.

இதையடுத்து படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மகனின் இறப்பு குறித்து தாய் தெய்வானை கூறுகையில், இதோ வந்துவிடுகிறேன் அம்மா என கூறி சென்ற எனது மகன் இறந்து போயுள்ளான். திருமண ஏற்பாட்டிற்கு சரி என்று சொன்னவன் சடலமாக ஆகிவிட்டான் என கண்ணீருடன் பேசியுள்ளார்.