சட்டவிரோத கருக்கலைப்பு செய்தமை தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 23 அன்று இபராக்கி மாகாணத்தின் டோரைடில் வசிக்கும் ஒரு இலங்கை மாணவி, அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோது தனது குழந்தையை கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுவதோடு, கருக்கலைப்புக்கு உதவியதாக அவரது காதலனான டோச்சிகி மாகாணத்தில் வசித்த இலங்கைப் பிரஜையையும் மே 23 அன்று கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர்
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி குறித்த பெண் தனது கருவைக்கலைப்பதற்காக கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களான இவர்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர். கருக்கலைப்பு செய்யுமாறு அவர்கள் மார்ச் மாத இறுதியில் டோச்சிகி ப்ரிபெக்சரில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவரைச் சந்தித்தனர், ஆனால் ஜப்பானின் தாய்வழி சுகாதாரச் சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டிய பெண் என்பதால் மருத்துவர் மறுத்துவிட்டார்.
கடந்த காலங்களில் கர்ப்பமாகி பிரசவித்த சில மாணவிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர், மற்றவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் தங்கள் குழந்தைகளை குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுவிட்டு படிப்பைத் தொடர்ந்தனர்
மேலும் சர்வதேச மாணவர்களின் நிலையற்ற குடியுரிமை இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு காரணியாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.