குழந்தை பெற்றெடுத்தால் 2 இலட்சம் ரூபா பரிசு : அதிரடி அறிவிப்பு..!



 பிறப்பு வீதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, குழந்தை பெற்றெடுக்கும் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு 2இலட்சத்து 88 ஆயிரம் ரூபா பரிசுத்தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

 ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு, தற்போது குழந்தை பிறப்பு வீதம் குறைந்துள்ளது. குழந்தை பிறப்பிப்பது குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான் மிகவும் குறைந்த அளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று கூறியுள்ளது. இதனை அடுத்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, இலங்கை மதிப்பில் 2இலட்சத்து 88 ஆயிரம் ரூபா  வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளும் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
---
 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லொஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுத்தீயால் பல கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சலிஸின் முக்கிய பகுதியான ஹொலிவுட் ஹில்ஸில் பல ஹொலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்களும், ஹொலிவுட் பிரபலங்களின் வீடுகளும் உள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயால் பல கோடி செலவில் கட்டிய வீடுகளை ஹொலிவுட் பிரபலங்கள் இழந்துள்ளனர்.