மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு-19 பேர் பலி!

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் உள்ள லாஸ் டினாஜாஸ் நகரத்தில் ஒரு கூட்டத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.துப்பாக்கி ஏந்தியவர்கள் சேவல் சண்டைக் குழிக்குள் நுழைந்து பங்கேற்பாளர்களை நோக்கிச் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.கொல்லப்பட்டவர்களில் 16 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.மைக்கோகன் மற்றும் அண்டை மாநிலமான குவானாஜுவாடோ மாநிலம் கோஸ்டி கும்பல்களுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது.கடந்த மாதம் கும்பல் தகராறின் விளைவாகக் கருதப்படும் மிச்சோகனில் நடந்த ஒரு தாக்குதலில் 17பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.