18 மணி நேர போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் சம்பவம்


 இந்தியாவின் கர்நாடக மாநிலம் லச்சியன் கிராமத்தில் 16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாகவும் இந்த கிணறு குழந்தையின் தந்தையின் சொந்த காணியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்நிலையில் குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக சுமார் 21 அடி ஆழத்தில் அதிகாரிகள் குழி தோண்டி குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.