வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரிலே இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 14 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 15 பெண்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கார் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்புக்களும் உரிமம் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.