கொழும்பில் 14 வயது மாணவி வன்புணர்வு; குற்றவாளிக்கு நீதிமன்றின் உத்தரவு!


பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் வங்கி முகாமையாளரை வருகின்ற 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றத்தில் தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை பம்பலப்பிட்டி காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

பொது வாகன நிறுத்துமிடத்துக்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பம்பலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்தும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.