வீட்டின் அடியில் 135 வருடமாக வெற்று போத்தலுக்குள் கிடந்த தகவல் - திகைத்து போன பெண் |


தனது வீட்டில் இருந்த தரை பலகைக்கு அடியில், ஒரு போத்தலுக்குள் 135 வருட தகவல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து ஒரு பெண் திகைத்து போயுள்ளார்.

வீட்டில் இருந்த ரேடியேட்டரை நகர்த்துவதற்காக பிளம்பர் ஒருவரை Eilidh Stimpson என்ற பெண் வர வைத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த பலகை தரையில் இருந்த ரேடியேட்டரை நகர்த்தி அதனை வெட்டிய போது அதற்குள் இருந்த பொருளை கண்டு Eilidh Stimpson அதிர்ந்து போயுள்ளார்.

ஏனென்றால், அந்த பலகைக்கு அடியில் வெறுமையான போத்தல் ஒன்றிற்குள் சுருட்டப்பட்ட காகித துண்டும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தரையில் பலகையை ஒரு பகுதியில் அறுத்த போது அதற்குள் ஒரு அறை போல இந்த போத்தல் இருந்ததை கண்டு பிளம்பர் மிரண்டு போனதாக தகவல் தெரிவிக்கின்றது.

உடனடியாக இது பற்றி எய்லித்திடம் அந்த பிளம்பர் தெரிவித்துள்ளார். உடனடியாக அதனை திறந்து காகிதத்தை படிக்க வேண்டும் என எய்லித் விரும்பினாலும் அவரது பிள்ளைகள் இரண்டு பேர் வரும் வரையும் அவர் ஆர்வத்துடன் காத்திருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு, அந்த போத்தலுக்குள் இருந்த காகிதத்தை பிரித்து படித்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் இருந்த விஷயத்தை பார்த்து, எய்லித்தின் குடும்பத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். அந்த காகிதத்தில், "ஜேம்ஸ் ரிச்சி மற்றும் ஜோன் க்ரீவ் ஆகியோர் இந்த தளத்தை அமைத்தனர். ஆனால், அவர்கள் இதில் இருந்த மதுவை குடிக்கவில்லை.

ஒக்டோபர் 6 ஆம் திகதி 1887" என குறிப்பிட்டு இந்த போத்தலை கண்டுபிடிப்பவர்கள் நாங்கள் இறந்து விட்டதாக நினைப்பார்கள் என்றும் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக எய்லித்தின் நண்பர் ஒருவர் சில ஆய்வுகள் மேற்கொண்டு 1880 களில் அங்கே வாழ்ந்த நபர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 135 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய குறிப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ள விஷயம், அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.