பிரான்ஸில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி!

பிரான்ஸ் கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் பல புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் மற்றும் இருவர் ஆண்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

விபத்தினை அடுத்து 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பிரான்ஸ் கடலோர பாதுகாப்புபடை தெரிவித்துள்ளது.

படகு அதிகபடியான சுமையை சுமந்து சென்றதே விபத்துக்கான காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்துக்கு முன்பு இந்த ஆண்டில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முற்பட்ட 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது