மெக்சிகோவில் வித்தியாசமான கண்காட்சி : 1,000 ஆண்டு பழமையான ஏலியன்களின் உடலங்கள் காட்சிக்கு

அண்மையில் மெக்சிகோவில் நடைபெற்ற வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான கண்காட்சி அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் இரண்டு ஏலியன்களின் உடலங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, அவை 2 உம் ஒரு பெட்டியில் வைத்து அனைவரின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

அது பார்ப்பதற்கு மனிதர்களை போலல்லாமல் அளவில் மிகவும் சிறியதாக காணப்படுகிறது, பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த உடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகளேனும் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பூமியில் மனிதன் வாழ்வதற்கு சான்றுகள் இருப்பதைப்போல் பிரபஞ்சத்தில் மனிதன் வாழ ஏதுவான கிரகங்கள் இருக்கிறதா என்றும், மனிதனைத் தவிர வேறு உயிரினங்கள் வேறு கிரகங்களில் வாழ்கின்றனவா என்ற கேள்விகளும் பரவலான பேசுபொருளாக உள்ளது.

வேற்றுக் கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்றுவரை முழுமையாக நிரூபிக்கப்படாமலேயே இருந்துள்ளது.

ஏலியன்கள் தொடர்பில் ஆங்காங்கே அவ்வப்போது பேசப்பட்டு வந்தாலும் அது தொடர்பான உண்மைகள் சிறிது மர்மம் கலந்தனவாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.

இவ்வாறான ஒரு நிலையில் மெக்சிகோவில் நடைபெற்ற இந்த கண்காட்சியானது வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

அது மாத்திரமல்லாமல் கண்காட்சியின், புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வெகுவாக பரவியும் வருகிறது.