பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி கடந்த 8 மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸா நகரம் போரினால் முற்றிலும் உருகுலைந்துள்ள நிலையில் தற்போது ராஃபா நகரின் மீது தனது கவனத்தை இஸ்ரேல் திருப்பியுள்ளது.
அகதி முகாம்கள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது.
அகதி முகாம்கள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது.
போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஐ.நா மும்முரம் காட்டி வந்தாலும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என்றே சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
எல்லைகளை இஸ்ரேல் தடுத்துள்ளதால் காசா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
எல்லைகளை இஸ்ரேல் தடுத்துள்ளதால் காசா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 139 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவின் தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார.
இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவின் தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார.
அதாவது, காசாவில் சராசரியாக தினமும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 10 குழந்தைகள் எனில் 260 நாட்களாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் சுமார் 2,000 குழந்தைகள் தங்களின் கால்களை இழந்துள்ளனர் .
மேலும் தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையே அங்கு இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த போரில் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இஸ்ரேலிய படையினர் கடந்த 48 மணி நேரத்தில் காஸா முழுவதும் ஐந்து இடம்பெயர்ந்தோர் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 139 பேர் உயிரிழந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காஸா - இஸ்ரேல் போர் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதையே தமது நாடு விரும்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தாக்குதலுக்குள்ளான பகுதிகளுக்கு பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் சுகாதாரப் பொருட்களுடனான பொதிகளை விநியோகித்துள்ளது.
இடம்பெயர்ந்தோர் தங்குமிடங்களில் அதிக நெரிசலால் ஏற்படும் நோய் பரவலை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.