தளபதி 67இல் விஜய்க்கு ஜோடியாக 03 நடிகைகள்!

விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜய்யுடன் 'தளபதி 67' படத்தில் இணைவது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதோடு சமந்தா வில்லியாக நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் அதிரடி காட்சிகளில் நடித்திருந்தார் சமந்தா. அதன்படி, தளபதி 67 படத்தில் சமந்தா சில சண்டைக் காட்சிகளில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.