உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்தியா இருந்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வரா? என்று ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பிய போதும், அமைச்சர் அது தொடர்பில் எந்தவித பதிலையும் வழங்கவில்லை.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தண்டனை சட்டக்கோவைதிருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது,
நீதவான் ஒருவரின் இடமாற்றம் தொடர்பில் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட கருத்து தொடர்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
நான் கூறியது அவ்வாறே இருக்கும். அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. நீங்கள் இந்தியாவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்ததாககூறியிருந்தீர்கள். இப்போது அதனை இல்லையென்று கூறுங்கள் பார்ப்போம் என்றார்.
இதனை தொடர்ந்தும் எழுந்த அமைச்சர் நளிந்த ஜயசேகர,
ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் கூறியதை இப்போது கூறுங்கள் பார்ப்போம். நீதிமன்றத்தை அவமதித்து நீதிச் சேவை ஆணைக்குழுவை அவமதித்துவிட்டு இப்போது உறுதிப்படுத்த முடியாது இருக்கின்றீர்கள் என்றார்.
இதேவேளை இருவருக்கும் இடையேமீண்டும் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில், இந்தியாவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்ததாககூறியதை நளிந்த ஜயதிஸ்ஸ வாபஸ் பெற்றுக்கொள்வரா? என்று மீண்டும் மீண்டும் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டே இருந்தார்.
எனினும் அதுபற்றி நளிந்த ஜயதிஸ்ஸ எந்தகருத்தையும் கூறவில்லை.