'ஜனாதிபதி அநுரவுடன் நெருக்கமாக பெண்..." சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து அதிரடி நடவடிக்கை


 
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம்,சட்டத்தரணி அகலங்க உக்வத்தே இந்தமுறைப்பாட்டைச் செய்துள்ளார்.

இந்தப் பதிவுகள், ஜனாதிபதியின் நற்பெயர் மற்றும் குணத்திற்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், தவறான வழியில், அவதூறான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக, முறைப்பாட்டை அளித்த சட்டத்தரணிகூறியுள்ளார்.

அதற்கமையை, இந்தப் பதிவுகளுக்குப் பொறுப்பான சமூக ஊடகக் கணக்குகளைச் செயற்படுத்துபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் பதிவுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எ ன்பதுடன், சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் என சட்டத்தரணி அகலங்க உக்வத்தே தெரிவித்துள்ளார்.