'ஏற்றுக்கொள்ள முடியாது.." ரஷ்யாவின் பதிலால் பேரிடியில் ட்ரம்ப்



 உக்ரேனுடனான போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரேன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

நிபந்தனையற்ற மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா - உக்ரேன் கூட்டாக முன்வைத்த யோசனையை ஏற்றுக் கொள்ள ரஷ்யா ஜனாதிபதி புடின் சமீபத்தில் மறுத்தார்.

உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள ரஷ்யா ஒப்புக் கொண்டது. ஆனாலும், உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ரஷ்யா, மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அழுத்தம் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என அண்மையில் தெரிவித்தார்.


இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கருத்து தெரிவிக்கையில்,

 அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் தீர்வுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.

ஆனால் அதன் தற்போதைய வடிவத்தில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அறிந்த வரை, இந்த மோதலின் மூலகாரணங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்த எங்கள் பிரதான கோரிக்கைக்கு அதில் இடம் அளிக்கப்படவில்லை. அது சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.