போதைப்பொருள் வலையமைப்பில் பாதுகாப்புப் படையினருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டு வருவதால் யாரும் பீதியடைய வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல்வாதிகள் போதைப்பொருள் வலையமைப்புடன் கொண்டிருந்த தொடர்புகளை தெரிவிக்குமாறு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் செய்தியாளர்கள் கோரிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்ட பின்னர், அவரது வெளிப்பாடுகள் மூலம் சில ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
மேலும் அந்தத் தகவல்களுக்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.
இதற்கான அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும்.
மேலும் அந்தத் தகவல்களுக்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.
இதற்கான அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை கைது செய்வதற்கு அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்த போது அவர் அங்கு இருக்கவில்லை.
பெக்கோ சமனின் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் மறைந்திருந்தனர். இதனால் இந்தோனேஷிய பொலிஸாருக்கு அவர்கள் அனைவரையும் ஒருமித்து கைது செய்ய முடிந்தது. அச்சத்தில் அவர்கள் ஒன்று கூடியதால் தான் அனைவரும் ஒன்றாக சிக்கினர்.
அதேபோன்று தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே சகல எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்திலும் பங்கேற்றுள்ளனர்.
எந்தவொரு எதிர்க்கட்சியையும் ஒடுக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியலில் ஈடுபடும் அனைவரும் இந்தக் குற்றங்களுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள் என்றால் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை.
மாறாக இவற்றுடன் ஏதேனும் அரசியல் தொடர்புகள் இருந்தால் அவர்களை சட்டத்தின் முன் ஒப்படைப்பதே சிறந்ததாகும். எதிர்கால சந்ததியினர் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் இவற்றுடன் தொடர்புடைய அரசியல் தலையீடுகள் தொடர்பில் வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியல்வாதிக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. அதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்று தஞ்சமடைவதும் பிரயோசனமற்றது என்றார்.