தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியாகும் என்ற நோக்கத்தில் கீழ்த்தரமான கதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றி சாணக்கிய எம்.பி.
சகல அமைச்சுகளும் மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அதனால் மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த அரசாங்கம் முற்படக்கூடாது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
"நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன், இனவாத அரசியல் செய்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை பாராளுமன்றில் பறைசாற்ற வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்"
இம்முறை மாகாண சபைகளுக்கு செலவுக்காக கடந்த வருடங்களை விடவும் மூன்று மடங்கு ஒதுக்கியுள்ளோம்.
எங்களுக்கு வங்குராேத்து அடைந்த நாடே கிடைத்திருந்தது. வீதிகளை அபிவிருத்தி செய்ய நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
எந்த வீதியாக இருந்தாலும் அந்தந்த வீதிகள் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவையே. நாங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயற்படுகின்றோம் என்பதனை வடக்கில் உள்ள சில எம்.பிக்கள் அறிந்துகொள்வார். நாங்கள் மூன்று மடங்கு நிதியை மாகாண சபைகளுக்கு ஒதுக்கியுள்ளோம். ஆனால் நீங்கள் இனவாத அரசியலை செய்ய வேண்டாம். அந்த கீழ்த்தரமான நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்றார்.
--