அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடையாது என்றும், அதற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள செலுத்துவதற்காக ஏதோவொரு வழியில் மக்கள் வரியைசெலுத்த வேண்டும் என்றும் சர்வஜன பலயகட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப் பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சர்வஜன பலய கட்சியினால் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக 164 பில்லியன் ரூபா செலவுசெய்யப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 65 பில்லியன் வரையில் செலவிடப்படுகின்றது.
இப்போதும் அஸ்வெசும கொடுப்பனவுக்காக வரி வருமானத்திற்கு மேலதிகமாக உலக வங்கியிடம் 25 வீதம் கடன் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
இந்த அரசாங்கம் அரசியல் அஸ்வெசுமவை தொடர்கின்றது. உலக வங்கி சுற்றி வந்து கைவிட்டதே அது. இதேவேளை எவரும் மக்களுக்கு தமது பலத்தால் முன்னேறும் வேலைத்திட்டத்தை மக்களுக்காக முன்வைக்கப்படவில்லை.
உலக வங்கியில் பெற்ற கடனுக்காக வட்டியை செலுத்தக் கூடிய வருமானத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் கூட வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. இந்த நிவாரணமுறையில் எவ்வித நன்மையும் கிடையாது.
அந்த நிவாரணத்திற்கும் வரி அறவிடப்படும். அதாவது ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் அதற்கான வரி அறவிடப்படும். இவ்வாறு அதனை செய்ய வேண்டுமா என்றார்