காத்தான்குடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்ததாக தகவல்


  
மட்டக்களப்பு நீதிமன்றத்தினால்  ஒரு திறந்த பிடியாணை உட்பட நான்கு பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் காத்தான்குடி பொலிஸாரினால்  நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்னாயகா தெரிவித்தார்
 
 காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பெரிய மீராபள்ளிவாயல் வீதியில் வைத்து குறித்த நபர் 14 சிறிய பக்கட்டுகள் கொண்ட 2250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

37 வயதுடைய இந்த நபர் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் நான்கு பிடிவாணைகள் பிறப்பிக்கப்பட்டு பொலிசாரினால் தேடப்பட்டு வந்த நபராவார்.
 நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர் தலைமறைவாகிய நிலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஐஸ்  மற்றும் ஐஸ் போதை பொருளை நிறுக்கும் நிறுவை இயந்திரம் உட்பட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன

சந்தேக  நபரை காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்