‘நான் இந்த போருக்கு எதிரானவன்- புடினின் முக்கிய உள்நாட்டு எதிரி அலெக்ஸி நவல்னி!

கிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் முக்கிய உள்நாட்டு எதிரியுமான அலெக்ஸி நவல்னி, நீதிமன்ற விசாரணையின் போது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராகப் பேசினார்.‘கொள்ளையடிப்பதை மறைப்பதற்கும், நாட்டின் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து, அதன் பொருளாதாரத்தின் சீரழிவிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் உக்ரைனுடனான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார். மேலும், ‘நான் இந்த போருக்கு எதிரானவன்.’ என்றும் தெரிவித்தார்.நவல்னி தற்போது பிணை மீறல்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட புதிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கப்படலாம்.