உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைமை வகிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டை வரவேற்பதாகப் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவுடனான எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் யுக்ரேன் மையமாக இருக்க வேண்டும் என அவர்கள் இருவரும் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பா தயாராகவுள்ளதாகவும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பின்போது உக்ரேன், ரஷ்யா போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யா, உக்ரேன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் ஐரோப்பிய அமைதிப்படையினரை உக்ரேனில் நிலைநிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் சம்மதிப்பார் என நம்புகிறேன். ரஷ்யா, உக்ரேன் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
போர் இன்னும் ஒருவாரத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரைவில் அமெரிக்காவுக்கு வருவார். உக்ரேனில் உள்ள அரியவகை தாதுக்களை எடுத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் உக்ரேன் விரைவில் கையெழுத்திடும் என எதிபார்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பி