'கிழக்கில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள்.." : பரபரப்பு தகவல் வெளியானது

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன.ஈரோஸ{க்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

கிழக்கில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுவருவதன் காரணமாக அவருக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி முன்வரவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

எதிர்வரும் ஓக்ஸ்ட் மாதத்திற்கு முன்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் செயற்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள்,பொரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ரணில்விக்ரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் எனவும் பிரபா இதன்போது தெரிவித்தார்.