பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை டிரம்ப் நேற்று வியாழக்கிழமைஅறிவித்துள்ளார். அதன்படி,
இந்தியாவுக்கு 26 வீதம்
சீனாவிற்கு 34வீதம்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20வீதம்
பிரிட்டனுக்கு 10வீதம்
வியட்நாமுக்கு 46வீதம்
தாய்வானுக்கு 32வீதம்
ஜப்பானுக்கு 24வீதம்
மலேசியாவுக்கு 24வீதம்
தென் கொரியாவுக்கு 25வீதம்
தாய்லாந்துக்கு 36வீதம்
சுவிட்ஸர்லாந்துக்கு 31வீதம்
இந்தோனேசியாவுக்கு 32வீதம்
கம்போடியாவுக்கு 49வீதம்
இலங்கைக்கு 44வீதம்
பாகிஸ்தானுக்கு 29வீதம்
வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனேசி
இந்த நியாமற்ற வரிவிதிப்புக்கு மிகப்பெரிய விலையை
செலுத்தப் போவது அமெரிக்கமக்கள்தான் என தெரிவித்துள்ளார். அதனால் தான் நாங்கள் பரஸ்பர வரிவிதிக்க
முன்வரவில்லை. விலைவாசி உயர்வுக்கும் வளர்ச்சி குறைவுக்கு வழிவகுக்கும் போட்டியில் நாங்கள் சேர மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த வரிவிதிப்பு உலகளாவிய வர்த்தக அமைப்பின் அடிப்படையையே
மாற்றும் என கூறியுள்ளார். அலுமினியம் மற்றும் ஆட்டோ மொபைல்கள் மீதானஅமெரிக்காவின் வரி வீ தம் கோடிக்கணக்கான கனடா மக்களை நேரடியாக பாதிக்கும். இந்த வரிவிதிப்புக்கு எதிராக நடவடிக்கை மூலம் போராடுவோம் எனவும் குறிப்பிட்டார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர, ;வர்த்தகப் போர் என்பது யாருடைய நலனுக்கானதும் இல்லை.அனைத்துக்கும் நாங்கள் தயாராகஇருக்கிறோம் என்று பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தை மொத்தமாக உலுக்கிய நிலையில், 8,000 அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிக்க இருப்பதாக பிரித்தானியா மிரட்டல் விடுத்துள்ளது.
இதனிடையே, வர்த்தகப் போர் இருதரப்புக்கும்பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜே ர்மனி எச்சரித்துள்ளது.
சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் நாங்கள் வர்த்தகப் போரை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டு மக்களின் சிறந்த வாழ்க்கைக்காக அமெரிக்காவுடன் இணைந்து வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான
பாதைக்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டறிய விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி
மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி, மற்ற நாடுகளுக்கு சõதகமாக அமையும் வர்த்தகப்போரைத் தவிர்க்கும் குறிக்
கோளுடன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரிவிதிப்பைஅமெரிக்கா அமல்படுத்தியிருப்பது தொடர்பாக
இதுவரை இந்திய அரசு தரப்பில் யாரும் கருத்துகளை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.