'மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்..." : யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவரொட்டிகள்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில், ''அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்....யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருவதோடு சமூக ஊடகங்களிலும் இந்த விடயம் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆர்வம் குறைவடைந்துள்ளதோடு, பிரசாரங்களும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.