'மர்ம உறுப்பை வெட்டியுள்ள கொலையாளி.." பிக்குவின் கொலையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்


அனுராதபுரம் - எப்பாவல  பகுதியில் விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட பிக்கு 69 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பிக்கு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணைகளின் படி குறித்த தேரர் கடைசியாக 23 ஆம் திகதி இரவு 8.29 மணிக்கு ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக தெரியவந்துள்ளது.


மேலும் கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் பிக்கு, மடத்தின் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது யாரோ ஒருவர் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி முகத்தை வெட்டி சிதைத்து பின்னர் அவரது பிறப்புறுப்புகளை வெட்டி எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பௌத்த ஆலயம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட தேரரால் நிறுவப்பட்டது என்றும் மேலும் அவர் மட்டுமே அங்கு வசித்து வந்தள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேரரின் உடல் கடுமையாக சிதைந்திருந்ததால், இந்தக் கொலை சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட தேரரின் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளது. அவரது பிறப்புறுப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேநேரம் விகாரையிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலாவ-எப்பாவல பிரதான வீதிக்கு அருகிலுள்ள வடிகாலில் வீசப்பட்ட நிலையில், தேரரின் அடையாள அட்டை உட்பட பல மதிப்புமிக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தேரர் தனது பயணங்களுக்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கொலையாளி அல்லது கொலையாளிகளால் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு மருத்துவமனைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தனர். கிராமவாசிகளுக்கும் தேரருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை  கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.


ஒரு சில கிராமவாசிகளைத் தவிர வேறு யாரும் இந்த விகாரைக்கு சென்றதில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.