‘பூமிக்கு திரும்பிய பிறகு சுனிதாவால் நடக்க முடியாமல் போகும்’ : திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின


சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா, ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் இன்று பூமியை வந்தடைய உள்ளனர்.

உலகமே எதிர்பார்த்துள்ள இவர்களின் வருகையை  நாசா தனது எக்ஸ் பக்கத்தில் நேரலை செய்கிறது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ள உள்ள அன்றாட வாழ்க்கை மாற்றங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  விண்வெளியில் 286 நாட்களுக்கு மேல் தங்கயமையால் உடளவில் பல மாற்றங்களை அவர் எதிர்கொள்வார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

அதாவது பூமிக்கு திரும்பியவுடன் அவருக்கு தசை மற்றும் எலும்பு பலவீனம் ஏற்படும்.

 புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20தொடக்கம் 30வீதம் பலவீனமாகி, எலும்பு அடர்த்தி ஒன்று தொடக்கம் 2 வீதமாக குறைவடையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது என பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக நடப்பதையே மறந்தது போன்று அவர்களுக்கு தோன்றும்.
 
  இரத்தம் மேல்நோக்கி செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம்.  

மேலும் கண்களுக்கு பின்னால் அழுத்தம் ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம்.

     9 மாதங்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தமையால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். இதேநேரம் மக்களின் சன நெரிசலும்  சத்தமும் அவருக்கு அசொளகரியமாக காணப்படும்.
 
  விண்வெளியில் உலர்ந்த உணவுக்கு உண்டு வாழ்ந்தமையால் பூமிக்கு திரும்பிய பிற செரிமானத்தில் பிரச்சினை ஏற்படும்.  

  ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வரலாம்.  
 
 சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியவுடன் நாசாவின் மறுவாழ்வு திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் அவருக்கு சிகிச்சைகளை வழங்குவார்கள். குறிப்பாக்க மூன்று வாரங்களிலேயே அவரால் நடக்க முடியும்.

இதேநேரம் 3தொடக்கம் 6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும்  அவரை விரைவாக மீட்க உதவும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.