உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் பல தகவல்களை தெரிவித்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவரும் தொடர்புடையதாக குறிப்பிடப்படுகிறது. எந்த குற்றத்தையும் நாங்கள் மூடி மறைக்க போவதில்லை என்றார்.
இதேநேரம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரிகாந்தனை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி
வித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரதுஅலுவலகத்தில் வைத்து 8 ஆம் திகதி இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சிவநேசதுரை சந்திரிகாந்தன் கைது செய்யப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.