தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பவர் மக்கள் விடுதலை முன்னணியின்கலவரத்தை அடக்குவதற்கு தலைமைத்துவம் தாங்கி இருக்கிறார். அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியெழுப்பிய ஐக்கியமக்கள் சக்தியின் கொழும்புமாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான், ரோஹேன விஜேவீரவுடன் நெருக்கமாக இருந்து அவருக்கு உதவி வந்ததுடன் ரோஹேன விஜேவீரவின் பிள்ளைகளை வளர்த்து வந்தவர் கருணா அக்கா. ஆனால் கருணா அக்காவின் அண்ணன் சைமனைகொலை செய்ய வழிநடத்தியது, ரணவீர என்ற உங்களது ஆலாசேகர். அவரை உங்கள் அரசாங்கம் கைதுசெய்யுமா? எனவும் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
மக்கள் விடுதலை முன்னணியிடம் ஓய்வுபெற்ற இராணுவ குழுவொன்று இருக்கிறது. அந்தக் குழுவில் 88,89 காலப்பகுதியில் இராணுவ முகாம்களுக்கு பொறுப்பான ஒருவராவது இருக்கிறார்களா?
ஆனால் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பவர் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தை அடக்குவதற்கு தலைமைத்துவம் தாங்கி இருக்கிறார்.
அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?அதேபோன்று மேஜர் ஜெனரல் தோரதெனிய என்பவரே ரோஹேன விஜேவீரவை கொலைசெய்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தோரதெனிய மாலைதீவில் இருக்கும் போது சுனில் ஹந்துன்னெத்தி ஒரு விழாவுக்கு சென்று அவருடன் ஒன்றாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அதேபோன்று சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஆலாசேகராக இருக்கும் ரணவீரவே அன்று வெலிபன்ன முகாமுக்கு தலைமைத்துவம் வகித்தார்.
தாஜுதீன் கொலையில். தேவையான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டு அவருக்கு எதிராக தெரிவிக்கப்படுகிறது.
அவரை வைத்துக் கொண்டுதான் அரசாங்கம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேடிவருகிறது. ரோஹேன விஜேவீரவுடன் நெருக்கமாக இருந்து அவருக்கு உதவி வந்த ஒருவர்தான் கருணா அக்கா.
ரோஹேன விஜேவீரவின் பிள்ளைகளை வளர்த்து வந்தது கருணா அக்காவாகும். ஆனால் கருணா அக்காவின் அண்ணன் சைமனை கொலை செய்ய வழிநடத்தியது, ரணவீர என்ற உங்களது ஆலாசேகர். அவரை உங்கள் அரசாங்கம் கைதுசெய்யுமா?
இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு தெரியாது. அதேபோன்று நீதி அமைச்சரின் தந்தை யசபாலித்த நாணயக்கார, பொதுஜன கட்சி மக்கள் மாகாண சபை உறுப்பினர், அவரை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது ஜே.ஆர். வழங்
கிய ஆயுதங்களை வைத்துக்கொண்டே பாதுகாத்துக் கொண்டார்.
அவர் எப்படி மறைந்திருந்தார் என்பதை நீதி அமைச்சரிடம் கேட்டுப் பாருங்கள். மக்கள் விடுதலைமுன்னணி உறுப்பினர்களை கொலை செய்ய ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நீதி அமைச்சரின் தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? அதனால் கடந்த கால வரலாற்றை கிளறும்போது பலரது விடயங்கள் வெளியில் வரும்.
இவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்கள். 88,89 காலப் பகுதியில் குற்றம் செய்த பலர் தற்போது அரசாங்கத்தில் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் பாதுகாக்குமா? அவர்களுக்கு வழங்கப்போகும் தண்டனைஎன்ன? அன்று குற்றம் செய்தவர்களுடனே இணைந்தே இவர்களுக்கு அரசாங்கம் அமைக்க முடிந்துள்ளது என்றார்.