2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக் கட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடற்படையின் வடக்கு தளபதியாகவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ ஊடக செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றிய டி. கே. பி. தசநாயக்க, சமீபத்திய சமூகஊடக நேர்காணலில், மோதல்முழுவதும் விடுதலைப் புலிகள் 26 கப்பல்களை வைத்திருந்தாலும்," இந்த 12 கப்பல்களின் அழிவு இந்திய கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது' என்று தெரிவித்தார்.
‘‘முப்பது ஆண்டுகால மோதல் தொடங்கியதிலிருந்து அதன் இறுதிக் கட்டம் வரை, விடுதலைப் புலிகள் 26 கப்பல்களை வைத்திருந்தனர்' என்று தசநாயக்க கூறினார்.
'இவை மோதலின் போது இலங்கை கடற்படையால்அழிக்கப்பட்டன. இருப்பினும், போரின் கடைசி கட்டத்தில், 12 கப்பல்கள் அழிக்கப்பட்டன. அவை இன்று மிகவும் நினைவில் உள்ளன.' என்றும் தெரிவித்தார்.