'நான் மஹிந்தவை சந்திக்க வேண்டும்.." : மோடியின் கோரிக்கையை மறுத்த அநுர அரசு



இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க காத்திருந்த போதிலும் முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தின் போது அரசியல்வாதிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் வெளிவிவகார அமைச்சு மோடியின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் மோடி இலங்கை வந்த போது மகிந்தவை சந்தித்துள்ள போதிலும் அரசாங்கம் இம்முறை சந்திக்க அனுமதிக்கவில்லை என அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இந்திய புதுடில்லியில் நேற்று நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.

இந்தியத் தலைவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் மோடியின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.

இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று ராஜபக்ச தனது பதிவில் தெரிவித்துள்ளார்.