'யாழ்ப்பாண மக்களை நினைத்து வெட்கமடைகின்றேன்.. முஸ்லிம்களுக்கு நன்றி.." சுமந்திரன்



ஒட்டுமொத்தமாக வடக்குக் கிழக்கிலே இருக்கிறதமிழ் பேசுகிற மக்கள் உணர்வு மூலமாக ஹர்த்தாலை செய்திருக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அதே வேளையிலே யாழ்ப்பாண நகரத்திலே மட்டும் தான் நிலைமை வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. மூளை முடுக்கெல்லாம் தமிழ் தேசிய மக்கள் வாழும் கிராமப்புறங்களில் எல்லாம் மக்கள் உணர்வுபூர்வமாக கடைகளை மூடி தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கின்ற அதே வேளையிலே மிகப்பெரிய நகரமாக, தமிழ் மக்களுடைய கலாசார அடையாளமாக திகழ்கின்ற யாழ்நகரிலே அதற்கு மாறான ஒரு செயற்பாடு இன்றைக்கு நடந்திருக்கிறது. வெட்கமாக இருக்கிறது. அதற்கான காரணங்களை நாங்கள் பிறகு ஆராய்வோம்  இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஹர்த்தால் நிலைமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே எம்.ஏ.சுமந்திரன்
இதனை தெரிவித்தார்.