“இராணுவத்தை வெளியேற்றியது யார்?..” வடக்கில் பதிவான சம்பவத்தால் பாதுகாப்புக்கு ஆபத்து என எச்சரிக்கை

இதுவொரு பௌத்த நாடு, இங்கே பௌத்த சம்பிரதாயங்களை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. இந்நிலை

யில் வடக்கிலுள்ள விகாரையொன்றில் வழிபாட்டு நிகழ்வை நடத்த விடாமல் எவராவது அதனை சீர்குலைப்பார்களாக இருந்தால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினரான ரியல்அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று திஸ்ஸ விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 20 பிக்குகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இராணுவத்தினர் அதற்கு முன்தினம் இரவு முதல் இந்த புண்ணிய நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இனவாத தமிழ் குண்டர்கள் 1012 பேர் வரையிலானோர் இந்த நிகழ்வை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வேளையில் சில நிமிடங்களில் உடனடியாக அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ அங்குள்ள இராணுவத்தினரை உடனடியாக விகாரையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவொன்று வந்துள்ளது.

அதன்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் அங்கே பெரஹராவை நடத்திய

போதும், உடரட்ட நடனம், சப்த பூஜை நடத்தப்படவில்லை. அத்துடன் பிக்குகளுக்கு பகல் தானமும் இருக்கவில்லை. அவர்கள் ஹோட்டலொன்றிலேயே தானத்தை ஏற்றுள்ளனர். இந்நிலையில் யார் இவ்வாறான

சீர்குலைக்கும் உத்தரவை வழங்கியது என்று நாங்கள் கேட்கின்றோம். அந்த உத்தரவை

வழங்கியது ஜனாதிபதியா? பிரதி பாதுகாப்பு அமைச்சரா? பாதுகாப்பு செயலாளரா? இல்லையென்றால் இராணுவத் தளபதியா? என்று கேட்கின்றோம்.

இவ்வாறு பௌத்த நாட்டில் வடக்கு விகாரையொன்றில் வழிபாட்டு நிகழ்வை நடத்த விடாமல் குண்டர்கள் அதனை சீர்குலைத்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என்ன நடக்கும் என்று கேட்கின்றோம். அரசியலமைப்பில் 9வது பிரிவில் பௌத்த மதத்தை பாதுகாப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அரசாங்கம் இவ்வாறு செய்யாது குண்டர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்கு இடமளிப்பது சிங்கள பௌத்தர்களுக்கும் மட்டுமன்றி முழு உலக பௌத்தர்களுக்கு

மான அடியாகும் என்பதுடன், அவர்களை அவமதிப்பதாகவும் அமையும். இதனால் இந்த உத்தரவை விடுத்தவர்கள் யார் என்பது தொடர்பில் தேடிப்பார்க்குமாறு நாங்கள் கேட்கின்றோம்.

யுத்தக் காலத்திலும் இந்த திஸ்ஸ விகாரையில் இராணுவத்தினர் வழிபாடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தமிழ் இனவாத குண்டர்களின் அச்சுறுத்தலால் அதனை இப்போது தடை செய்துள்ளனர்.

வடக்கை பிரிவினைவாதிகளிடம் கையளித்துவிட்டீர்களா? என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். அவ்வாறு கொடுத்திருந்தால் அதனை மூடி மறைக்கவா தலதாபுனித சின்ன கண்காட்சியை நடத்துகின்றீர்கள் என்று கேட்கின்றோம். நாடு அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. அரசாங்கம்

5 வருடங்களுக்கான பொறுப்பானவர்கள்மட்டுமே. இந்நிலையில் பல தசாப்தங்களாக

நாட்டில் இருந்த பௌத்த சம்பிரதாயங்களைமீறுவதற்கு உரிமை கிடையாது.

பௌத்த மத நிகழ்வுகளை சீர்குலைக்கவும் உரிமைகிடையாது. இன்னும் நாட்டுப்பற்று சிங்கள பௌத்த மக்கள் இருக்கின்றனர் என்பதனைமறந்து விட வேண்டாம். அவர்கள் மௌன மானவர்கள் என்பதனையும் மறக்க வேண்டாம் என்று கூறுகின்றோம்.

இதேவேளை அமைச்சர் ஹினிதும சுனில்செனவி என்பவர் வடக்கு மக்களுடன் உரை

யாடியதாகவும், விகாரைகள், இராணுவமுகாம்களிடம் உள்ள காணிகளை மக்களிடம்

கையளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் யுத்தத்தின் பின்னர் கையகப்படுத்திய காணிகளில் 96 வீதத்திற்கும்மேல் மீள கொடுத்துவிட்டோம். இதனால் இது தொடர்பில் செயற்படத் தேவையில்லை.

வேண்டுமென்றால் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் 25 ஆயிரம் சிங்களகுடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் இருந்தன. அவர்களின் காணிகள் எங்கே. நீங்கள் நல்லிணக்கம் தொடர்பில்சிந்தித்தால் அங்கே அந்த மக்களையும் அங்கே குடியேற்றி அவர்களுக்கும் அவர்களின் காணியை வழங்க வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார்.