முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.
இதனால் அங்கு பெரும் சர்சையான நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், விமானப்படையினரின் இக்கோரிக்கைக்கு தமது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கடுமையான எதிர்ப்பினையடுத்து விமானப்படையினருக்கு காணி வழங்கப்படுவதில்லை என நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
படையினரால் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த குறித்த காணி விடுவிப்புச்செய்யப்பட்டநிலையி
அத்தோடு இன்னும் 190ஏக்கர் அளவில் மக்களுக்குரிய காணிகள் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்கவேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து போராடியும், கோரிக்கைகளை முன்வைத்தும்வருகின்றனர்.
இவ்வாறிருக்க மீண்டு விமானப்படையினர் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியினை மீண்டும் கோருவது வேடிக்கையாகவுள்ளது.
யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தகாலத்திற்கு மேலாகியுள்ள நிலையில் மக்களின் காணிகளை அபகரித்து இங்கிருந்துகொண்டு விமானப்படையினர் யாருடன் யுத்தம் செய்யப்போகின்றனர்.
எனவே கேப்பாப்புலவு மக்களின் விவசாயக் காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென என அவர் தெரிவித்தார்.