ரக்பி வீரர் தாஜுதீன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச்சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனமும் இந்த தாஜுதீன் சம்பவத்துக்கு உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைதுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சி சி டி வி விசாரணைகளில் கஜ்ஜா இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனுடன் தொடர்ச்சியாக மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள்வெளி வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகி இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்ட ஒருவர் அதற்கான உதவிகளை வழங்கியுள்ளார்.
இதுபோன்று பல்வேறு தகவல்கள் தற்போது வெளி வருகின்றன.
அதேபோன்று செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனமும் இந்த தாஜுதீன் சம்பவத்துக்கு உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் வெகு விரைவில் தேவைப்படும் தகவல்கள் முழுமையாக கிடைத்து விசாரணைகளை நிறைவு செய்ய முடியும் என்றார்.
இதேநேரம் றகர் வீரர் தாஜுதீ னி ன் சம்பவம் தொடர்பான விசாரணை இடம்பெறும்போது அரசியல்வாதிகள் சிலர் குழப்பமடைந்திருக்கின்றனர். இந்தவிசாரணைக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது விசாரணைகளில் இருந்து தெரியவரும். எனவே யாரும் அவசரப்படதேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்
தாஜுதீனின் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மறைக்கப்பட்டிருந்துடன் சாட்சியங்களின் கருப்பொருள் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது.
தாஜுதீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற நபரின் உருவம் சீ.சீ.டிவி காட்சிகளில் வெளிப்பட்டபோது அதுதொடர்பில் விசாரணைமேற்கொள்ளப்பட்டது.
அதன்போது அது கஜ்ஜா என்ற நபர் என இனம் காணப்பட்டது.
தற்போது இந்த கஜ்ஜா தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும்போது வெளியில் இருக்கும் அரசியல்வாதிகள் சிலர் குழப்பமடைந்துள்ளனர்.
கஜ்ஜாவுடன் தொடர்பு வைத்துள்ளவர்களே இவ்வாறு குழப்பமடைந்து ஊடக சந்திப்புககளை நடத்தி விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணைகளில் இருந்து தெரியவரும். எனவே யாரும் அவசரப்படத் தேவையில்லை குற்றவாளிகள் மிக விரைவில் கைதுசெய்யப்படுவர் என அவர் தெரிவித்தார்..