யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பெ ண் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சிகிச்சை முகாமுக்குச் சமூகநலன் நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானமாக வழங்கப்படுமென நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்றுச் முன்தினம் செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,
நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண் நாய்களுக்கான கருத்தடைச் செயற்திட்டத்தினை நல்லூர் பிரதேச சபைமுன்னெடுக்கின்றது.
இதன்படி,10 ஆம் திகதிமுதல் 14 ஆம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச்சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
பெண் நாய்களுக்கான இந்த இலவச கருத்தடை ச் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களால் வளர்க்க ப்படும் பெண் நாய்களுக்குரிய கருத்தடை ச் சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது