‘‘தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா?..” - சாகல ரத்நாயக்க கேள்வி

 

 தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகும் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
 
 கொழும்பு பிளவர் வீதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இதற்கு முன்னரும் பி.பி.ஜயசுதந்தர மற்றும் காமினி செனவிரத்ன போன்றோர் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது தேசபந்து தென்னகோனை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அழுத்தம் காரணமாகவே தேசபந்து தென்னகோனின் நியமனம் காலம் தாழ்த்தப்படுவதாகக் கூறினர்.

ஆனால் இன்று நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனைகளால் கூறப்படும் கதைகளாகும்.

நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றதென்றால் இதுவே இன்றைய நிலைவரமாகும் என்றார்.