கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன், நீதிமன்றத்திற்குள் வைத்து
சஞ்சீவவை கொலை செய்ய துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும், செவ்வந்தியும் ஒத்திகை
பார்த்துள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களான இருவரும் சம்பவத்திற்கு இரு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சென்று ஒத்திகை
பார்த்து திட்டத்தை ஒழுங்கமைத்ததாக, கொழும்பு குற்றப்பிரிவை சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை, தற்போதுதடுப்புக் காவலில் உள்ள மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த நபரே அவர்கள் இருவரையும் நீதிமன்ற அறையை காட்டுவதற்கு முன்வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்ற அறையைக் காட்ட முன்வந்ததற்காக செவ்வந்தியிடமிருந்து 2000
ரூபா பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
நீதிமன்ற அறையை காட்டிய பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் செவந்தியும்,
துப்பாக்கிச் சூட்டு நடத்திய பின் அங்குபெரும் அமளிதுமளிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கைகள்எடுப்பார்கள் என்றும் அவர்கள் எடுக்கும்முடிவுகள் எப்படி இருக்கும் என்பது உட்பட
இருவரும் நடித்து ஒத்திகை பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது