கொழும்பு, கொட்டவை பகுதியில் வெவ்வேறு வகையான 458 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மலே வீதி கொட்டாவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
24 வயதுடைய அங்குலான மொரட்டுவை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வெவ்வேறு வகையான 458 துப்பாக்கித் தோட்டாக்கள், டீ-56 ரக துப்பாக்கியின் கோப்பு, 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின், 30 போலி வாகன இலக்கத் தகடுகள், 15 வாகன வருமான உத்தரவு அனுமதிப்பத்திரங்கள், 15 காப்பீடு பத்திரங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.