யாழில் வேகக்கட்டுபாடு இழந்து மின்கம்பத்துடன் மோதிய உந்துருளி - ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த க.செறிஸ்டன் (வயது 49) என்ற நபர் என தெரியவந்துள்ளது.

உந்துருளியானது வேகக்கட்டுபாட்டை இழந்த நிலையில் அருகில் உள்ள மின் கம்பத்தினுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.